MDnD Entertainment Private Limited
கினோ 2.0
கினோ 2.0
பட்ஜெட் அதிகமாக உள்ள திரைப்படங்கள் தான், திரையில் பார்ப்பதற்கு 'சினிமாட்டிக்' ஆக இருக்குமென்று பலர் நினைகிறார்கள். அனால், 'கினோ' வின் தொடர் வரிசைப் புத்தகங்கள் மூல, வெளிப்படுகிற உண்மை என்னவென்றால், ஒரு திரைப்படத்தைக் கட்சியியல் தோற்றத்தில் சினிமாட்டிக்காகத் தெரிய வைப்பதற்கு, பணம் தேவையில்லை. உங்கள் அறிவு நுட்பத்தைப் பயன்படுத்தினாலே போதும்.
இந்த 'கினோ 2.0' புத்தகத்தின் வாயிலாகக் கற்று கொள்ளும் நுட்பங்களைக் கொண்டு, நீங்கள் எடுக்கிற உரையாடல் காட்சியைத் தகுந்த அளவிற்கு பலப்படுத்த முடியும். இதன் வாயிலாக, கதைக்களத்தை ஒவ்வொரு திருப்புமுனைப் புள்ளியும், காட்சியின் ஒவ்வொரு உணர்வும், நுட்பமான அர்த்தமும், திரையில் தெளிவாக வெளிப்படும்.
உரையாடைகளை ஆக்கப் பூர்வமான வழியில் படமாக்க நினைக்கும் இயக்குனர்கள், உண்மையில் திரைக்கதையின் நுணுக்கங்களைத் தான் ஆழமாக ஆய்வு செய்கிறார்கள். அந்த உணர்வின் அடிப்படையிலேயே கேமரா நகர்வையும், நடிகர்களின் நகர்வையும் தீர்மானிக்கிறார்கள். பொதுவாக அழகான காட்சிகள் சுவாரஸ்யம் ஏற்படுத்துவதாக இருந்தாலும், கண் கவரும் காட்சியை உருவாக்கும் நோக்கத்தில் மட்டுமே உங்கள் காமெராவை நகர்த்தவோ, நடிகர்களை மாற்றியமைக்கவோ கூடாது. காட்சியின் அழகான அர்த்தத்தை, உணர்வை வெளிப்படுத்தவும், காட்சி ரீதியிலான வலுவான தாக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்கவும், நீங்கள் புத்திசாலித்தனமான காட்சியமைப்பை, ஸ்டேஜிங்கைப் பயன்படுத்த வேண்டும்.